Homeசெய்திகள்சென்னைபெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு – தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

-

- Advertisement -

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (மார்ச் 28) சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!பெரம்பூரில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்த பகுதியில் சுமார் 300 பேர் மட்டுமே கூடக்கூடிய இடவசதி உள்ளது. ஆனால், விஜய்யின் வருகையை முன்னிட்டு அங்கு 3,000-க்கும் மேற்பட்டோர் கூட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகக் குறுகிய இடத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடினால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் உண்டாகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, காவல்துறையின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்துள்ளது.

இருப்பினும், தவெக தரப்பிற்குப் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
​தற்போதைய இடத்திற்குப் பதிலாக, போதிய இடவசதி கொண்ட மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ​புதிய இடத்திற்கான அனுமதியைக் கோரி காவல்துறையிடம் மீண்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்க தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

​விஜய் தனது தேர்தல் பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த இந்தப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அவரது தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் – தேர்தல் அதிகாரி விளக்கம்

MUST READ