spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅன்பறிவு மாஸ்டர்கள் இயக்கத்தில் உலக நாயகன்... வெளியானது அதிரடி அறிவிப்பு

அன்பறிவு மாஸ்டர்கள் இயக்கத்தில் உலக நாயகன்… வெளியானது அதிரடி அறிவிப்பு

-

- Advertisement -
சண்டை பயிற்சியாளர்கள் அன்பு மற்றும் அறிவி ஆகிய இருவர்கள் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார்.

உலக நாயகனாக உலகம் முழுவதும் கொடி கட்டி பறப்பவர் கமல்ஹாசன். தமிழ் சினிமா வளரத் தொடங்கிய காலம் முதலே அதன் கைபிடித்து வளர்ந்த நாயகன் தான் இந்த உலக நாயகன். இவரது நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். நடிப்பு மட்டுமன்றி அரசியல் மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார். ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் அவர் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு நடிக்கும் இரண்டு புதிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்.

இதனிடையே, அவர் ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு தக் லைப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் த்ரிஷா, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
we-r-hiring

இந்நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, கோலிவுட்டின் பிரபல சண்டை பயிற்சியாளர்கள் அன்பு மற்றும் அறிவு மாஸ்டர்கள் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. விக்ரம், லியோ, கைதி உள்பட பல திரைப்படங்களில் அன்பறிவு மாஸ்டர்கள், சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.

MUST READ