பாக்ஸ் ஆபிஸில் வெறித்தனமாக வேட்டை நடத்தும் கேப்டன் மில்லர்
- Advertisement -
தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கோலிவுட் திரையுலகின் தங்க மகனாக கொண்டாடப்படுபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் தனது திரை வாழ்வை தொடங்கினார். தொடக்கத்தில் தனது தோற்றத்திற்காகவும், உடல் எடைக்காகவும் விமர்சிக்கப்பட்ட இந்த நாயகன், இன்று ஹாலிவுட் நாயகனாக உயர்ந்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் கொடி நாட்டிய தனுஷ் பாலிவுட் பக்கம் திரும்பினார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.


தற்போது பாலிவுட்டில் மட்டும் இரண்டுதிரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது தவிர ஹாலிவுட்டிலும் தனுஷூக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனிடையே அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கேப்டன் மில்லர் . அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேட்பன் மில்லர் திரைப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் கேப்டன் மில்லர் படம் இதுவரை சுமார் 38 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.