- Advertisement -
அயலான் திரைப்படத்தில் ஏலியனாக வரும் நபருக்கு, லியோ படத்தில் ஹைனாவாக நடித்திருந்தவர் தான் பயிற்சி அளித்தாக தெரிவித்துள்ளார்.


கோலிவுட்டின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான டான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. சுமார் 100 கோடிக்கு மேல் படம் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

அயலான் திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து பல ஆண்டுகள் ஆயினும், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இத்திரைப்படம் வெளியாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. ஒருவழியாக அயலான் திரைப்படம் பல தடைகளை தாண்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.



