- Advertisement -
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வருவதை தொடர்ந்து, படக்குழுவினர் அதனை கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. டோலிவுட் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். புதுவிதமாக கதைகளில் நடிக்காவிட்டாலும், கமர்ஷியல் படங்களின் மூலம் மட்டுமே வசூலை குவித்து பெரும் கமர்ஷியல் மன்னனாக வலம் வருபவர் மகேஷ் பாபு. கடந்த ஆண்டு அவரது நடிப்பில் சர்க்காரு வாரிப்பட்டா என்ற திரைப்படம் வெளியானது. அதில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அத்திரைப்டம் கலவையான விமர்சனம் பெற்றது. தமிழிலும் அப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது.


இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய படம் குண்டூர் காரம். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். நடிகர் மகேஷ் பாபு ஏற்கனவே, திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அத்தாடு, கலேஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறது. மேலும், இது மகேஷ் பாபு நடிக்கும் 28-வது படமாகும்.



