spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉறியடி விஜயகுமாரின் 'ஃபைட் கிளப்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உறியடி விஜயகுமாரின் ‘ஃபைட் கிளப்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

உறியடி விஜயகுமார் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.உறியடி விஜயகுமாரின் 'ஃபைட் கிளப்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த 2016ல் விஜயகுமார் நடிப்பில் உறியடி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து உறியடி 2 திரைப்படமும் வெளியாகி கவனம் பெற்றது. அரசியல் பின்னணியில் உருவாகியிருந்த இந்த இரண்டு படங்களையுமே
உறியடி விஜயகுமார் தானே எழுதி இயக்கி நடித்திருந்தார்.

இந்நிலையில் உறியடி விஜயகுமார் ஃபைட் கிளப் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. போதைப் பொருள், கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியான இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருந்தார் விஜயகுமார். உறியடி விஜயகுமாரின் 'ஃபைட் கிளப்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்த படத்தில் விஜயகுமாருடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்க லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. மேலும் சில தினங்களுக்கு முன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பட குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ