spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தி.மு.க.!

மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தி.மு.க.!

-

- Advertisement -

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க மூன்று குழுக்களை அறிவித்துள்ளது தி.மு.க. தலைமை. மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தி.மு.க.வின் குழுவில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

வெற்றி நடைபோடும் அருண் விஜயின் ‘மிஷன் சாப்டர் 1’…. ஒதுக்கப்படும் கூடுதல் திரையரங்குகள்!

அதன்படி, கனிமொழி கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், ராஜேஷ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா…. லேட்டஸ்ட் அப்டேட்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் தி.மு.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ