spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா.... லேட்டஸ்ட் அப்டேட்!

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா.... லேட்டஸ்ட் அப்டேட்!எம். ராஜேஷ் கடந்த 2009இல் ஜீவா மற்றும் சந்தானம் கூட்டணியில் வெளியான சிவா மனசுல சக்தி எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. ஜீவா, சந்தானம் காம்போவின் காமெடி இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து எம். ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட காமெடி நிறைந்த படங்களை இயக்கினார்.

அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் ப்ரதர் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் எம் ராஜேஷ். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் எம். ராஜேஷ் அடுத்ததாக நடிகர் அதர்வாவை இயக்க இருக்கிறார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா.... லேட்டஸ்ட் அப்டேட்!

we-r-hiring

நடிகர் அதர்வா சமீபத்தில் மத்தகம் எனும் வெப்தொடரில் நடித்திருந்தார். அதே சமயம் ஒத்தைக்கு ஒத்த எனும் படத்திலும் நடித்து வருகிறார். சமீப காலமாக அதர்வா நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. எனவே அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்க உள்ள புதிய படம் நடிகர் அதர்வாவிற்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய படம் சிவா மனசுல சக்தி படத்தைப் போன்று காமெடி கலந்த கதை களத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ