- Advertisement -
தமிழ் சினிமா இயக்குனர்களில் கௌதம் மேனன் ஒரு ஸ்டைலிஸ் இயக்குனர். கலர்ஃபுல் காதலாக இருந்தாலும் சரி, காக்கி கசங்கும் ஆக்சனாக இருந்தாலும் சரி, தன் படத்தை கிளாஸாக காட்டுவதில் கௌதம் வாசுதேவ் மேனன் கில்லாடி. மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கௌதம் மேனன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இரண்டாவது படத்தில் சூர்யாவுக்கு காக்கி மாட்டி அதிரடி காட்டினார். தாறுமாறு ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தில், தோட்டாக்கள் பாயும் அதே வேகத்தில் காதலைையும் பாய்ச்சி கரை புரள செய்தார் கவுதம்.

காதலை பல பரிமாணங்களில் சொன்ன கவுதமுக்கு, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒரு பென்ச்மார்க். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனனின் திரைவாழ்வில் அனைத்தும் ஏறுமுகம் தான். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜோஸ்வா இமை பால் காக்க. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.




