Homeசெய்திகள்சினிமாகுட்டி, வேங்கை படங்களுக்கு பிறகு தனுஷுடன் இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத்..... அல்டிமேட்டான அறிவிப்பு!

குட்டி, வேங்கை படங்களுக்கு பிறகு தனுஷுடன் இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத்….. அல்டிமேட்டான அறிவிப்பு!

-

- Advertisement -

குட்டி, வேங்கை படங்களுக்கு பிறகு தனுஷுடன் இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத்..... அல்டிமேட்டான 'D51' அறிவிப்பு!நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் உள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படமான D50 படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தனது 51வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். D51 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.குட்டி, வேங்கை படங்களுக்கு பிறகு தனுஷுடன் இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத்..... அல்டிமேட்டான 'D51' அறிவிப்பு!

இந்நிலையில் மேலும் ஒரு அறிவிப்பை பக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி மற்றும் வேங்கை உள்ளிட்ட படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. எனவே மூன்றாவது முறையாக தனுஷ் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ