spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி.... முதல் பாடல் வெளியானது...

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி…. முதல் பாடல் வெளியானது…

-

- Advertisement -
கோலிவுட்டில் கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையில் இணைந்து மக்கள் வரவேற்பை பெற்ற பெரும் நகைச்சுவை நடிகர் சந்தானம். சின்னத்திரையில் வரவேற்பை பெற்ற லொல்லுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சந்தானம். அடுத்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்தார். விஜய், அஜித், ரஜினி, என அனைத்து டாப் நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களிலும் அவர் நகைச்சுவை நடிகராக பணியாற்றி உள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ வேடத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஆண்டுக்கு பல திரைப்படங்களில கமிட்டாகி சந்தானம் நடித்து வருகிறார்.

சந்தானம் நடிப்பில் இறுதியாக வெளியான தில்லுக்கு துட்டு பாகம் 2, கிக் மற்றும் 80ஸ் பில்டப் ஆகிய திரைப்படங்கள் வரவேற்பை பெற்றன. தொடர்ந்து நகைச்சுவை சார்ந்த திரைப்படங்களில் மட்டும் சந்தானம் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படத்திலிருந்து முதல் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ