

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.22) திறந்து வைக்கிறார். அயோத்தியில் மூலவரான குழந்தை ராமனின் சிலை கருவறையில் இன்று (ஜன.22) நிறுவப்பட உள்ளது.
இயற்கையான முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்!
ராமர் பிறந்த பூமி என நம்பப்படும் அயோத்தியில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பகல் 12.20 மணிக்கு பிரதிஷ்டை விழா தொடங்கி மதியம் 01.00 மணிக்கு நிறைவடையும்.
புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு கோயில் கருவறை தூய்மைப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை வைபவம் நடக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் சுமார் 2,000 ரூபாய் கோடி மதிப்பில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்காக மகா பிரசாதம் வழங்கப்படுகிறது. ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மகா பிரசாதம் வழங்கப்படுகிறது. நெய், 5 வகையான உலர் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டு, சரயு நதி தண்ணீர் ஆகியவை அதில் இடம் பெறவுள்ளது.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க!
அதேபோல், அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை (ஜன.22) காலை 07.00 மணி முதல் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
