
மாநில மகளிர் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

‘ரத்னம்’ படப்பிடிப்பு முடிஞ்சது…. ரிலீஸ் தேதியும் குறிச்சாச்சு…… மகிழ்ச்சியுடன் அறிவித்த விஷால்!
வரும் ஜனவரி 28- ஆம் தேதி அன்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சூழலில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.23) காலை 11.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு, காந்தி, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஹீரோயின் அவதாரம் எடுக்கும் சின்னத்திரை கனவுக்கன்னி!
அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்க மாநில மகளிர் கொள்கை வழிவகை செய்கிறது. அதேபோல், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.