ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் ரத்னம். ஹரி,விஷால் கூட்டணி ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்தது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே அடுத்ததாக ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படத்தில் ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அனிமேஷன் வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Yes yes yes. Done with entire shoot of #Rathnam. Was an absolute pleasure to work with Dir Hari sir for the third time, with darling DOP @mynnasukumar and the entire unit. Always a memory for life working in such a positive atmosphere all through the shoot right from Tuticorin,… pic.twitter.com/TJzRg9skFb
— Vishal (@VishalKOfficial) January 23, 2024
அந்த பதிவில், “ஆம் ஆம் ஆம். ரத்னம் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. மூன்றாவது முறையாக ஹரி சாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து படப்பிடிப்பில் பணி புரிந்தது எப்போதும் மறக்க முடியாத நினைவாக இருக்கும். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் கார்த்திக் மற்றும் குழுவிற்கு நன்றி. தேவி ஸ்ரீ பிரசாத்தின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆக்சன் விரும்பிகளுக்கு நல்ல விருந்தாக இருக்கும். திரையில் இந்த படத்தை பார்க்கும் போது குடும்பப் பொழுதுபோக்கு மகிழ்ச்சியை தரும். கோடையில் விருந்தாக இருக்கப் போகிறது. மே மாதத்தில் வெளியாக உள்ள படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.