spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்!

முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்!

we-r-hiring

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.23) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆஃப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ‘BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

எலும்பு முறிவால் அவதிப்பட்ட அருண் விஜய்…. புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி…

இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய் இ.ஆ.ப., ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு இ.ஆ.ப., ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் அசோக் குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுதிர் பிள்ளை, பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பாவ்னா சிங்கல், கார்னிங் இந்தியா நிறுவனத்தின் வணிக இயக்குநர் திவ்யான்சு கவுதம், அரசாங்க விவகாரங்கள் இயக்குநர் அமித் குமார் ஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ