Homeசெய்திகள்சினிமாஎலும்பு முறிவால் அவதிப்பட்ட அருண் விஜய்.... புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி...

எலும்பு முறிவால் அவதிப்பட்ட அருண் விஜய்…. புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -
அண்மையில் ஏற்பட்ட எலும்பு முறியால் கடும் அவதிப்பட்ட நடிகர் அருண் விஜய், சிகிச்சையில் இருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அன்று முதல் இன்று வரை கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் நடிகர் அருண் விஜய். 90-களில் அவரது திரைப்பயணம் இன்று வரை வெற்றிப்பயணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் காதல் மற்றும் காமெடி படங்களில் ஆர்வம் செலுத்தி வந்த அருண் விஜய், அடுத்தடுத்து ஆக்‌ஷன் ஹீரோவாாக உருவெடுக்கத் தொடங்கினார். தடம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சினம், யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். யானை படத்தை ஹரி இயக்கினார். இதைத் தொடர்ந்து வணங்கான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் ஒன். ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கி இருந்தார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்தது. மலையாள நடிகை நிமிஷா சஜயன் மற்றும் ஆங்கில நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அருண் விஜய் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எலும்பு முறிவு, மற்றும் தசைநார் கிளிப்பால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் படப்பிடிப்புக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாரா என பாராட்டி இருக்கின்றனர்.

MUST READ