Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!

மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!

-

- Advertisement -

மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!ஒரு நகைச்சுவை நடிகராக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் தான் நடிகர் சந்தானம். அந்த வகையில் இவர் அஜித், விஜய், ஆர்யா, ஜீவா, சூர்யா உள்ளிட்ட பல முன்னாடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சமீப காலமாக ஹீரோவாக மட்டுமே பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி கடந்த ஆண்டில் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்துள்ளார் சந்தானம்.மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி! இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பாடல், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் என்று வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சந்தானம், மேகா ஆகாஷ், நடிகர் ஆர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பாகவும் கலகலப்பாகவும் நடைபெற்ற வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம்,ஆர்யா காம்போவில் புதிய படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கார்த்திக் யோகி இயக்க உள்ளதாகவும், இரண்டு ஹீரோக்களின் படமாக இது உருவாக இருப்பதாகவும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!

ஏற்கனவே ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணியில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரின் காம்போவில் உருவாக இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

MUST READ