முன்னாள் அமைச்சார் பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து மார்ச் 4 வரை விலக்கு தொடரும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம், 30 நாட்களுக்கு பிறகு கீழமை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தொடர்ந்து வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கும் வரை பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு தொடரும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா உத்தரவிட்டுள்ளார்