spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!

சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!

-

- Advertisement -

சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!சீந்தில் மூலிகையின் முழு தாவரமும் கசப்பு சுவையுடையது. மேலும் இவை வெப்பத்தன்மையை கொண்டவையாகவும் இருக்கின்றன. இது வெள்ளைப்படுதல், பேதி, காய்ச்சல், மந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றை குணப்படுத்தும். இதன் இலைகளும் தண்டுகளும் உடல் பலத்தை அதிகரிக்கும். இதனால் வாத நோய்கள், கிரந்தி போன்றவை குணமடையும்.

சீந்தில் கொடியின் காய்கள் உருண்டையானவையாகவும் பச்சையாகவும் காணப்படும். மேலும் இதன் பழங்கள் பட்டாணி அளவில் இருக்கும். அதேசமயம் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

we-r-hiring

சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு சீந்தில் தண்டிலிருந்து மேல் தோலை அகற்றி அதனை இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயமாக செய்து பருக வேண்டும். இந்த கசாயத்தை மூன்று நாட்களுக்கு மூன்று வேலைகள் தொடர்ந்து பருகி வந்தால் சளி, காய்ச்சல் விரைவில் குணமடையும்.

சீந்தில் கொடியின் தோல் நீக்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மாலை என இரு வேலைகளில் இரண்டு தேக்கரண்டி அளவு 100 மில்லி லிட்டர் பாலுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உடல் உறுதி அடையும்.சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!

நாவறட்சி குணமடைய சீந்தில் கொடியின் மேல் தோலை நீக்கி சீந்தில் தண்டு, நெற்பொரி ஆகியவற்றை தல ஐம்பது கிராம் அளவு எடுத்து நசுக்கி ஒரு லிட்டர் நீரில் சேர்த்து அரை லிட்டராக வற்றி வரும் வரை சுண்டக்காய்ச்சி நாளொன்றுக்கு 50 மில்லி லிட்டர் வீதம் நான்கு வேளைகள் குடித்து வர வேண்டும்.

இருப்பினும் இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ