- Advertisement -
பாலிவுட் மட்டுமன்றி கோலிவுட் திரையுலகிலும் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் இந்தியில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தூம். அவர் நடித்த கிரிஷ் திரைப்படமும் தமிழில் வரவேற்பை பெற்றது. இதனால், ஹிருத்திக் ரோஷனுக்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். நடிப்பு மட்டுமல்ல ஹிருத்திக்கின் நனடத்திற்கும் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் இறுதியாக தமிழில் வெளியான விக்ரம் – வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். புஷ்கர் – காயத்ரி இப்படத்தை இயக்கினார்.

தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள திரைப்படம் ஃபைட்டர். இதில், தீபிகா படுகோன், , அனில்கபூர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் சேகர் படத்திற்கு இசை அமைத்துள்ளார். 250 கோடி ரூபாய்க்கும் அதிமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.




