- Advertisement -
விரைவில் எல்.கே.ஜி. மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகும் என நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக கலைப்பயணத்தை தொடங்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. அவரது குரலுக்கும், கிரிக்கெட் வர்ணணைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால், அவர் திரைத்துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு என்ற திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அறிமுகமாகினார். இதையடுத்து, நானும் ரவுடி தான், இது என்ன மாயம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
