- Advertisement -
விஜய் தேவரகொண்டா மற்றும் மிர்ணாள் தாகூர் நடிப்பில் உருவாகியிருக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சினிமா பின்புலமே இல்லாமல் யூடியூப் வீடியோக்கள் மற்றும் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, இன்று சினிமாவின் முகவரியாக மாறி இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. டோலிவுட்டில் பெல்லிசோப்லு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய். அடுத்ததாக அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம், இந்திய அளவில் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்கில் அவர் நடித்து வந்தார்.,
