- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனஸூம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொந்த வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது
மாடல் அழகியாக இருந்த பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் வென்று பட்டம் வென்றவர் ஆவார். இதைத் தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக நடித்த அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். இதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா, அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். அனைத்து முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்று வசூலை குவித்ததை அடுத்து குறுகிய நாட்களிலேயே அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
