spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிரஞ்சீவியின் விஷ்வாம்பரா படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை த்ரிஷா.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

சிரஞ்சீவியின் விஷ்வாம்பரா படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை த்ரிஷா…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

-

- Advertisement -
சிரஞ்சீவி நடிக்கும் 156வது படமான ‘விஷ்வாம்பரா’ படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை த்ரிஷா. 18 ஆண்டுகளுக்கு இந்த ஜோடி மீண்டும் திரையில் வரவுள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் தனது அடுத்த படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இப்படத்திற்கு விஷ்வாம்பரா என்று அண்மையில் தலைப்பு வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, படத்தின் நாயகி குறித்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வந்தன. இந்நிலையில், படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நடிகை த்ரிஷா படப்பிடிப்பில் பங்கேற்ற காணொலியையும் படக்குழு பகிர்ந்துள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு நடிகர் சிரஞ்சீவி பூங்கொத்து வரவேற்றார்.
we-r-hiring

இத்திரைப்படத்தின் மூலம் சிரஞ்சீவி மற்றும் த்ரிஷா கூட்டணி 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. விஷ்வாம்பரா திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

MUST READ