- Advertisement -
வைபவ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரணம் படத்திலிருந்து புதிய பாடலை படக்குழு, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். இவர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பல படங்களில் கமிட்டாகி அவர் நாயகனாக நடித்து வருகிறார். மேயாத மான், கப்பல், லாக்கப், பபூன், ஆர் கே நகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ரணம் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷெரிஃப் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை மது நாகராஜன் தயாரித்துள்ளார்.
