நம் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமென்றால் வாரத்திற்கு இரண்டு முறை ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். அதனை கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் மாஸ்க் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் சத்துக்கள் நிறைந்த பழங்களை வைத்து ஃபேஸ் மாஸ்க் போடலாம். அந்த வகையில் பப்பாளி, மாம்பழம், ஸ்ட்ராபெரி போன்றவை ஃபேஸ் மாஸ்க் போடுவதற்கு சிறந்த பழங்கள் ஆகும்.
நம் கூந்தல் மென்மையாக இருப்பதற்காக கெமிக்கல் நிறைந்த கண்டிஷனர்களை பயன்படுத்தி வருகிறோம். இனி அவைகளை தவிர்த்து தயிரை ஹேர் கண்டிஷனராக பயன்படுத்துவது நல்லது. தயிரை பயன்படுத்தினால் கூந்தல் பட்டு போன்ற மென்மையாக இருக்கும்.

பனிக்காலங்களில் உதடுகளில் வறட்சி ஏற்படுகிறது. எனவே இவற்றை தடுக்க லிப் பாம்களை பயன்படுத்தாமல் வெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க அடிக்கடி கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துவதை தவிர்த்து, மஞ்சள் மற்றும் பாசிப்பயறு கலந்த கலவையை முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்.
நம் கை கால்களில் தேவையற்ற முடிகள் இருப்பதால் அதனை வாக்சிங் என்ற முறையின் மூலம் தேவையற்ற முடிகளை அகற்றுகிறோம். இவ்வாறு செய்வதனால் வலியும் வேதனையும் மட்டும் தான் மிஞ்சுகிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் அந்த முடிகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே வழி நிறைந்த வாக்சிங் முறைகளை பின்பற்றுவதை தவிர்த்து நம் பாட்டி சொன்ன பியூட்டி டிப்ஸ் ஐ பின்பற்றலாம். அதாவது தினமும் காலையில் எழுந்தவுடன் கடுகு எண்ணெய் தேய்த்து கை, கால்களில் மசாஜ் செய்து பின்னர் குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்வதனால் முடிகள் அதிகமாக வளர்வது தடுக்கப்பட்டு நம் கை கால்கள் முடிகின்றி மென்மையாக காணப்படும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.