spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சளி, காய்ச்சலுக்கு உதவும் மூலிகை பானம்!

சளி, காய்ச்சலுக்கு உதவும் மூலிகை பானம்!

-

- Advertisement -

சளி, காய்ச்சலுக்கு உடனடியாக இந்த மூலிகை பானத்தை செய்து கொடுங்க.சளி, காய்ச்சலுக்கு உதவும் மூலிகை பானம்!

தேவையான பொருட்கள்:

we-r-hiring

சுக்கு – 20 கிராம்
கொத்தமல்லி – 20 கிராம்
இஞ்சி – 30 கிராம்
திப்பிலி – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
பனை வெல்லம் – 200 கிராம்
புதினா இலை – ஒரு கைப்பிடி
தண்ணீர் – ஒரு லிட்டர்

மூலிகை பானம் செய்யும் முறை:

இந்த மூலிகை பானம் செய்ய முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவசியம்.

இப்பொழுது கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனை மிதமான சூட்டில் வறுத்து பொடியாக்க வேண்டும்.

அதேசமயம் சுக்கு, மிளகு, இஞ்சி, திப்பிலி, புதினா, பனைவெல்லம் ஆகிய பொருள்களை நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.சளி, காய்ச்சலுக்கு உதவும் மூலிகை பானம்!

அந்த தண்ணீருடன் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பொடியை சேர்த்து இடித்து வைத்த பொருள்களையும் சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்துவிட்டு இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மூலிகை பானம் தயார். இதனை சாதாரண காய்ச்சல், சளி இருக்கும் சமயங்களில் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.சளி, காய்ச்சலுக்கு உதவும் மூலிகை பானம்!

இருப்பினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.

MUST READ