- Advertisement -
விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்தின் ‘தீமா’ என்ற பாடலின் Glimpse விடியோவை இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்தார்.
தமிழ் திரையுலகில் டாப் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கணவரும் ஆவார். சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதையடுத்து, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் காதலிக்கத் தொடங்கிய அவர்கள் திருமணம் செய்து கொண்டு, இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கினார். இதில், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு எல்.ஐ.சி. என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும், தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
#Dheema – here’s a glimpse ❤️
We heard you!
Happy Valentines Day 💕@VigneshShivN 🤗@pradeeponelife 😃@7screenstudio ⚡️ pic.twitter.com/yedpcrwsJ1
— Anirudh Ravichander (@anirudhofficial) February 14, 2024
