spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநூலிழையில் உயிர்தப்பிய ராஷ்மிகா... வெளியான அதிர்ச்சி செய்தி...

நூலிழையில் உயிர்தப்பிய ராஷ்மிகா… வெளியான அதிர்ச்சி செய்தி…

-

- Advertisement -
விமான பயணம் மேற்கொண்ட நடிகை ராஷ்மிகா நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

we-r-hiring
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ரெயின்போ மற்றும் தி கேர்ள் பிரண்ட் ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார். இது தவிர புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்று மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, விமானம் மும்பையிலேயே தரையிறக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

MUST READ