- Advertisement -
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இறந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தைச் சேர்ந்தவர் நடிகர் மயில்சாமி. சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால், சென்னை சென்ற அவர் 1984-ம் ஆண்டு தாவணி கனவுகள் படத்தின் மூலம் நடிகராக திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து என் தங்கச்சி படிச்சவ, கமிலின் அபூர்வ சகோதரர்கள், கன்னிராசி, வெற்றிவிழா, பணக்காரன், உழைப்பாளி உள்பட அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். முக்கிய வேடம், குணச்சித்திர வேடம் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்திருக்கிறார்.


விஜய், அஜித், விக்ரம், விஜயகாந்த், தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவரின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் மயில்சாமி தனித்துவம் கொண்டவர். மயில்சாமி தனது ’மிமிக்ரி’ வாயிலாக தமிழ் ரசிகர்களை மகிழ வைத்தவர். சிறு சிறு பாத்திரங்களிலில் நடித்துக் கோண்டே பின்னணி குரல் கலைஞராகவும் வளர்ந்து வந்தார். சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி உயிரிழந்தார்.



