Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கள்கிழமையான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்நிலையில், வாரத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,280-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,785க்கும் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ77.க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ