- Advertisement -
சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் நடிகராக இருந்தாலும், தனது நடிப்பில் மூலம் மட்டுமே சினிமாவில் உயரத்திற்கு சென்ற பெருமை இவரைச் சேரும். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
