- Advertisement -
மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான த்ரிஷா, 20 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை முன்னணி நடிகையாக தன் இடத்தை தக்க வைத்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார். தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி, ரவி தேஜா, பிரபாஸ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். மலையாளத்திலும் இவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

தென்னிந்தி சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வரும் த்ரிஷா இறுதியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு மன்சூரும் மன்னிப்பு கேட்டார்.




