spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இண்டு மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

இண்டு மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

இண்டு மூலிகை என்பது தமிழ்நாட்டில் சிறு காடுகளிலும் வேலிகளிலும் தானாகவே வளரக்கூடியது. இதன் பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூவை போல் பூக்கும். மேலும் இதன் காய்கள் பட்டையாக காணப்படும். இவை விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.இண்டு மூலிகையின் தண்டை துண்டாக நறுக்கி அதன் ஒரு புறத்தில் வாயினால் ஊத ஒருபுறம் சாறு வெளியேறும். இண்டு மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!இவ்வாறு கிடைக்கும் சாறுடன் 15 மில்லி திப்பிலி பொடியை ஒரு கிராம் அளவு சேர்த்து அதனை காலை வேளையில் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு மேலே கூறப்பட்ட மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு கொடுத்தால் போதுமானது. அவ்வாறு கொடுப்பதன் மூலம் சளி, மாந்தம் போன்றவை குணமாகும்.

இண்டு கொடி சமூலம், தூதுவளை, கண்டங்கத்தரி ஆகியவற்றுடன் ஒரு படி அளவு திப்பிலி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டர் தண்ணீராக வற்றி வரும் வரை காய்ச்சி, காலை, மாலை என இரு வேளைகளில் 100 மில்லி லிட்டர் வீதம் கொடுத்து வர இரைப்பிருமல் தீரும்.இண்டு மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

we-r-hiring

மேலும் இண்டு வேர், தூதுவளை வேர் ஆகியவற்றை பொடியாக்கி இரண்டு லிட்டர் நீரில் சேர்த்து கால் லிட்டராக பற்றி வரும் வரை காய்ச்சி 100 மில்லி லிட்டர் அளவு நாள் ஒன்றுக்கு இரண்டு வேளைகளில் குடிக்கலாம். இண்டு இலை, சங்கிலை, தூதுவளை இலை, திப்பிலி, சுக்கு, ஆகியவற்றை 20 கிராம் அளவு எடுத்து அதனை ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

இருப்பினும் இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ