ரன்பீர் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த படம் தான் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
வெளியான முதல் நாளிலிருந்து பல்வேறு தரப்பினர் இடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ஒரு சிலர் படத்தையும் ரன்பீர் கபூரின் நடிப்பையும் பாராட்டி வந்தனர். அதே சமயம் இத்திரைப்படம் உலக அளவில் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், வன்முறை காட்சிகளும், ஆண் ஆதிக்கமும் இடம்பெற்றிருந்தால் படத்தை பலரும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். அதைத் தொடர்ந்து ரன்பீர் கபூர், அனிமல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். அது மட்டும் இல்லாமல் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சமீபத்தில் நடந்த நேர்காணலில், அனிமல் படத்தை பார்த்தபோது தன்னை அறியாமல் கண் கலங்கி விட்டதாகவும், ரன்பீர் கபூரின் நடிப்பு பிரமாதமாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார். மேலும் சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
