மலர் டீச்சரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த கதாபாத்திரம். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இப்படத்தின் மூலமாகவே அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய் பல்லவி அடுத்து தமிழில் மாரி 2 படத்தில் நடித்தார். அடுத்து தியா, என்ஜிகே, பாவ கதைகள், கார்கி, படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான லவ்வர் மற்றும் பிடா ஆகிய படங்கள் அனைத்து மொழிகளிலும் பெரிய ஹிட் அடித்தன. நடிப்பு மற்றும் நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கும் சாய் பல்லவி ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்று வருகிறார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வரும் சாய்பல்லவி, தான் நடிக்கும் படங்களுக்கு தானே சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக புதிய மொழிகளையும் அவர் கற்றுக்கொண்டு வருகிறார்.