ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது!

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை 2024 தீபாவளி தினத்தையொட்டி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
அடுத்ததாக நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் ஆக்சன் படமாக உருவாக உள்ள
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்கயிருக்கிறது.
It’s a true honour to collaborate with the legendary @rajinikanth Sir! Anticipation mounts as we prepare to embark on this unforgettable journey together!
– #SajidNadiadwala @WardaNadiadwala pic.twitter.com/pRtoBtTINs— Nadiadwala Grandson (@NGEMovies) February 27, 2024
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் சஜித் நதியத்வாலா ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளாராம். எனவே இது தலைவர் 172 படமாக இருக்கலாம் என்று செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே தலைவர் 172 படத்தை பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.