Homeசெய்திகள்சினிமாதிரிஷாவிற்காக காத்திருக்கும் 'விடாமுயற்சி'...... ஏன் தெரியுமா?

திரிஷாவிற்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’…… ஏன் தெரியுமா?

-

- Advertisement -

நடிகை திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இமாலய வெற்றிக்குப் பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்றுள்ளார். அதன்படி இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வர, தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சிரஞ்சீவியின் விஷ்வம்பரா படத்திலும், டோவினோ தாமஸின் ஐடென்டிட்டி படத்திலும் இருக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியுள்ளார்.திரிஷாவிற்காக காத்திருக்கும் 'விடாமுயற்சி'...... ஏன் தெரியுமா?

இந்நிலையில் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. அது தொடர்ந்து அஜர் பைஜானில் படத்தின் முதற்கட்ட இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. திரிஷாவிற்காக காத்திருக்கும் 'விடாமுயற்சி'...... ஏன் தெரியுமா?அடுத்ததாக படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது நடிகை திரிஷா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவருடைய கால்ஷீட் கிடைப்பதற்காக விடாமுயற்சி டீம் காத்துக் கொண்டிருக்கிறதாம். ஏனென்றால் அவருடைய காட்சிகள்தான் அதிகமாக படமாக்கப்பட இருக்கிறதாம். ஏற்கனவே த்ரிஷாவின் கால்ஷீட்டை விடாமுயற்சி பட குழு வீணடித்து விட்ட நிலையில் திரிஷாவின் கால்ஷீட் கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

MUST READ