தனுஷ் இயக்கத்தில் ராயன் திரைப்படம் உருவாகியுள்ளது. தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். இதில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார் என்ன ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தினை 2024 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களின் போஸ்டர்களை தினமும் படக்குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்க்கின்றனர்.
ஏற்கனவே எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா, அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அடுத்ததாக நடிகர் சரவணன் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Introducing #Saravanan from the world of #Raayan 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 @kalidas700 @sundeepkishan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas… pic.twitter.com/XYy8KSlQBw
— Sun Pictures (@sunpictures) February 27, 2024
தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.