- Advertisement -
மலையாள சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை பல்லாவரத்தில் பிறந்து இன்று ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் தன் பெயரையும், புகழையும் நிலை நாட்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் முன்னணி நடிகை சமந்தா. அடுத்தடுத்து படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர்கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார். விஜய், சூர்யா, மகேஷ் பாபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜூனியர் என்டிஆர் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
