Homeசெய்திகள்சினிமாவாடகை வீட்டில் வசித்து வரும் பாகுபலி பட நடிகர்?

வாடகை வீட்டில் வசித்து வரும் பாகுபலி பட நடிகர்?

-

- Advertisement -

பாகுபலி பட நடிகர் பிரபாஸ் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர்தான் பிரபாஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.வாடகை வீட்டில் வசித்து வரும் பாகுபலி பட நடிகர்? அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஆதி புரூஷ் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. கடைசியாக பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை வாரி குவித்தது. அதைத்தொடர்ந்து ராஜாசாப் எனும் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். இதற்கிடையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898AD படத்திலும் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம் மே 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.வாடகை வீட்டில் வசித்து வரும் பாகுபலி பட நடிகர்?

we-r-hiring

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தனது ஓய்வு நேரத்தை செலவிட லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு வாடகை வீட்டில் இவர் வசித்து வருவதாகவும், அந்த வாடகை வீட்டிற்கு மாதம் ரூ. 60 லட்சம் செலவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பிரபாஸ், இன்னும் சில நாட்களில் ராஜாசாப் படப்பிடிப்பில் இணைய விரைவில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ