- Advertisement -
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வந்த முன்னாள் மிஸ் இந்தியா சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

திரிபுராவைச் சேர்ந்த மாடல் அழகி ரிங்கி சக்மா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து பல விளம்பங்களில் அவர் நடித்து வந்தார். மாடலாகவும் பணிபுரிந்துவந்துள்ளார். ஆனால், திரைப்படங்களில் இதுவரை அவர் நடித்ததில்லை. முன்னாள் மிஸ் இந்தியா ரிங்கி சக்மா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் அவ்வப்போது பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.


இந்நிலையில், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிசிச்சை பெற்று வந்தார். தனது 26 வயது முதலே புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்த அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல்நலம் மோசம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சையும் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் வைக்கப்பட்டார். ரிங்கியின் நெருங்கிய தோழியும், மாடல் அழகியுமான பிரியங்கா குமாரி, ரிங்கியின் சிகிச்சைக்கு நிதி திரட்டவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்



