spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பா.ஜ.க. வேட்பாளர்!

மக்களவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பா.ஜ.க. வேட்பாளர்!

-

- Advertisement -

மக்களவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பா.ஜ.க. வேட்பாளர்!

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பின்னணி பாடகர் பவன்சிங், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

we-r-hiring

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பின்னணி பாடகர் பவன்சிங், “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் சில காரணங்களால் தன்னால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது” என்று குறிப்பிட்டதுடன் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை டேக் செய்துள்ளார்.

பா.ஜ.க. சார்பில் நேற்று (மார்ச் 02) வெளியிடப்பட்டிருந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதியில் பின்னணி பாடகர் பவன்சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த முறை அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்ரூகன் சின்ஹாவுக்கு, அக்கட்சி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக பவன்சிங் களமிறக்கப்பட்டார்.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

இந்த சூழலில் தான் பவன்சிங் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ