spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோட் ரீமேக் படம் இல்லை... இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்...

கோட் ரீமேக் படம் இல்லை… இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்…

-

- Advertisement -
கோட் திரைப்படம் ரீமேக் படம் இல்லை என்று, படத்தின் இயக்குநரர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

கோலிவுட்டின் கொண்டாட்ட நாயகன் நடிகர் விஜய். அவர் தமிழ் மொழியில் மட்டுமே நடித்தாலும், இந்திய திரை உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.

we-r-hiring
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது திரைப்படம் ஆகும். அதில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோட் திரைப்படம் ஆங்கில படத்தின் ரீமேக் என்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜெ பேபி பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கோட் திரைப்படம் ஒரு ரீமேக் படம் அல்ல, புதிய பிரஸ்ஸான படம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பின்னணி வேலைகளை பொறுத்து தான் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும், படத்தில் பாடல்கள் அதிகம் உள்ளது எனவும், 24 மணி நேரமும் விஜய் எங்களுடன் தான் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ