- Advertisement -
திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மணிகண்டனின் லவ்வர் திரைப்படம், ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்த மணிகண்டனுக்கு தொடக்கத்தில் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான், மணிகண்டனின் திரைவாழ்வு ஏறுமுகமாக அமைந்தது. அவரது முகமும் பிரபலம் அடையத் தொடங்கியது. ராஜாகண்ணுவாக அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் மணிகண்டனை கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் குட் நைட் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மாதம் 9-ம் தேதி லவ்வர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.



