நடிகர் அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண பரிசோதனை தான் என்று கூறப்பட்ட நிலையில் அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அஜித்துக்கு, அவருடைய மூளைக்கும் காதுக்கும் இடையில் உள்ள நரம்பில் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்ததை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது. சிகிச்சைக்கு பின்னர் அஜித், நேற்று அதிகாலையில் வீடு திரும்பினார்.
வீடு திரும்பியதும் அஜித் ஓய்வு கூட எடுக்காமல் தனது மகன் ஆத்விக்- ன் ஸ்கூலுக்கு சென்றிருக்கிறார். அங்கு கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட
மகனைப் பார்க்க சென்றுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அஜித்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.
மேலும் நடிகர் அஜித் ஓரிரு நாட்கள் ஓய்விற்கு பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைய உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15-ல் மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
