spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎழுத்தாளர் ஜெயமோகனை சங்கி என விமர்சித்த இயக்குனர்!

எழுத்தாளர் ஜெயமோகனை சங்கி என விமர்சித்த இயக்குனர்!

-

- Advertisement -

கடந்த மாதம் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், பாலு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் சைஜூ ஹாலித் ஒளிப்பதிவு செய்திருந்தார். சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகனை சங்கி என விமர்சித்த இயக்குனர்!எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களிடையேயும் பேராதரவை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. மிகக் குறுகிய நாட்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது மஞ்சுமெல் பாய்ஸ் படம் தனக்கு எரிச்சலூட்டுவதாகவும், கேரளத்து பொறுக்கிகளுக்கு அடிப்படை அறிவு கிடையாது எனவும் விமர்சித்திருந்தார்.எழுத்தாளர் ஜெயமோகனை சங்கி என விமர்சித்த இயக்குனர்! இதற்கு எழுத்தாளர் ஜெயமோகனை, கடந்த 2013இல் வெளியான மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தனது சமூக வலைதள பக்கத்தில் சங்கி என்று விமர்சித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ” தமிழ் பொருக்கிகள் என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி) கேரளா பொறுக்கிகள் என்று சொன்ன இந்த சங்கியும் ( எழுத்தாளர் ஜெயமோகன்) ஒரே சாக்கடையில் ஊரும் இரண்டு தவளைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ