Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாக புகார்... மேடையில் விளக்கம் அளித்த கவின்... படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாக புகார்… மேடையில் விளக்கம் அளித்த கவின்…
- Advertisement -
நடிகர் கவின் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, மேடையில் வைத்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகரான கவின், லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்தும் பெரும் சிக்கல்களை தாண்டி வெளியான டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடன இயக்குநர் சதீஷ், இயக்குராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அதேபோல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலடனுடன் கவின் புதிய படம் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், அண்மைக் காலமாக படப்பிடிப்புக்கு நடிகர் கவின் நேரத்திற்கு செல்வதில்லை என்றும்,கேரவனில் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனால், சிம்பு போல கவின் செயல்படுகிறாரா என நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர். இதனிடையே, தற்போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நான் லேட்டாக வருகிறேனா, என்னிடம் 7 மணி என கூறினார்கள். நான் 6 மணிக்கே ரெடியாகி விட்டேன் என தெரிவித்துள்ளார்.