spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசென்னையில் பிரம்மாண்ட திராட்சை தோட்டம்... மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தீவிரம்...

சென்னையில் பிரம்மாண்ட திராட்சை தோட்டம்… மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தீவிரம்…

-

- Advertisement -
நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருந்த நிலையில், அவர் அங்கு வர தயங்கியதால் சென்னையிலேயே பிரம்மாண்டமாக திராட்சைத் தோட்ட செட் போடப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. சுமூகமாக வெளிவந்த இத்திரைப்படம் வெளியீட்டுக்கு பிறகு பல சர்ச்சைகளை கிளப்பியது. இதைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் நீக்கப்பட்டது. இதனிடையே, சினிமா மட்டுமன்றி குடும்பம் மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வரும் நாயகி நயன்தாரா. அவ்வப்போது தன் இரட்டை மகன்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார்.

we-r-hiring
அண்மையில் அவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதில் மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து மண்ணாங்கட்டி திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். பிரபல யூ டியூபர் ட்யூட் விக்கி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன், யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் கதைக்களம் ஊட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்ட நிலையில், நயன்தாரா குழந்தைகளை விட்டு ஊட்டிக்கு வர முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

நயன்தாரா பிடிவாதமாக ஊட்டிக்கு வர மறுத்துவிட்டதால், அவருக்காக சென்னையிலேயே பிரம்மாண்ட திராட்சை தோட்ட செட்டை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், நயன்தாராவின் செயலால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

MUST READ