- Advertisement -
கடந்த ஜனவரி மாதம் மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் உள்ள பிரபலங்கள், நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், மக்களும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த லட்சக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், அதற்கு ஏற்றபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சியில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மோலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.




